மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 400 தொகுதிகளில் வெற்றி.. இந்தியா டிவி கருத்துக்கணிப்பு..!

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (08:49 IST)
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாகவும் வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி ஹாட்ரிக் அடிப்பார் என்றும் இந்தியா டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் ஊடகங்கள் தற்போது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தாலும், பாஜக 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவது என்றெல்லாம் நடக்காத காரியம் என்றும், 300க்கும் கீழ்தான் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்தியா டிவி கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதில் பாஜக கூட்டணி 399 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் நாடு முழுவதும் வெறும் 38 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது

குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் பாஜகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா டிவி தெரிவித்துள்ளது

கிட்டத்தட்ட 400 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்