பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியா இந்திய முப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இடங்கள், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என மொத்தம் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல், பஹல்காமில் இந்திய படைவீரர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திய படைகளை பாராட்டினர்.
இந்நிலையில், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.