போர் எதிரொலி! மேகாலயாவில் 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு..?

Prasanth Karthick

வெள்ளி, 9 மே 2025 (17:42 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக இந்தியா - வங்கதேச எல்லை அருகே உள்ள மேகாலயாவில் 2 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் அந்த தாக்குதல்கள் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன.

 

பாகிஸ்தான் இந்தியாவை தாக்க பலவாறு திட்டம் தீட்டி வரும் நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லையோர விமான நிலையங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இந்தியா - வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயாவில் போர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இரவு நேர முழு ஊரடங்கு மேகாலயாவில் அமல்படுத்தப்படுகிறது. தற்போதைய வங்கதேசம், முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து போர் காரணமாக வங்கதேசமாக உருவானது. இந்தியா - பாகிஸ்தான் போரில் வங்கதேசத்தின் நிலைபாடு இன்னும் சரியாக தெரிய வராத நிலையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்