இந்த செயற்கைக்கோளின் உதவியால் பகலில் மட்டுமின்றி இரவிலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் இந்த செயற்கைக்கோள் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் வகையில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இஸ்ரோ தலைவர் சிவன், பிஎஸ்எல்வி சி-46 மூலம் ரீசாட்-2பி செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக சந்திராயன் -2ஐ வரும் ஜூலை 9ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விண்கலம் செப்டம்பர் 6ம் தேதி சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.