அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் மிலிந்த் கார்கேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மிலிந்த் கார்கே, கடந்த பல நாட்களாக அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான பிரியங் கார்கே, கர்நாடக அரசில் தற்போது அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளை அவர் கவனித்து வருகிறார்.