உலகில் நாம்தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

செவ்வாய், 12 ஜூலை 2022 (20:17 IST)
உலகில் நாம் தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம் என்றும் பணவீக்கத்தை நாம்தான் கட்டுப்படுத்தி உள்ளம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பேசியுள்ளார்
 
உலகிலுள்ள பல நாடுகள் பணவீக்கம் காரணமாக பெரும் பாதிப்பை அடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன
 
 இந்த நிலையில் இன்று அமைச்சர் உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது உலகில் நாம் தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம் என்றும் இலங்கை பாகிஸ்தான் போன்ற நமது அண்டை நாடுகள் பணவீக்க பாதிப்பால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றதுஎன்றும் கூறினார்
 
ஏன் அமெரிக்காவில் கூட பணவீக்க பாதிப்பு இருக்கும் நிலையில் பணவீக்கத்தை நாம்தான் கட்டுப்படுத்தி உள்ளோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்