சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை நிறுத்தம்: அமெரிக்கா உத்தரவு.!

வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:57 IST)
சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனையை நிறுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான என்விடியா மற்றும் ஏ.எம்.டி ஆகிய நிறுவனங்கள் இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் AI chip கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வருகின்றன
 
இந்த நிலையில் இந்த AI chip விற்பனையை சீனாவுக்கு விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணங்களால் சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே தொழில் போட்டி இருந்துவரும் நிலையில் தற்போது AI chip விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்