போட்டோஷூட்டில் தாக்கிய மின்னல்! உடல் கருகி இறந்த மணமகன்! – சீனாவில் அதிர்ச்சி!

வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:35 IST)
சீனாவில் திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்தியபோது மணமகன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக திருமண ஜோடிகள் நல்ல லோக்கேசன்களுக்கு சென்று ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்துவது சமீப காலத்தில் பிரபலமாகியுள்ளது. திருமணம் செய்யும் அனைவரும் திருமணத்திற்கு முன்னதாக இவ்வாறான போட்டோஷூட்டுகளை எடுக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் யுனான் மாகாணத்தை சேர்ந்த ரூவான் என்ற இளைஞருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் சீனாவின் “ஜெட் டிராகன் ஸ்னோ” என்ற மலைப்பகுதியில் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் போட்டோஷூட் நடத்தப்பட்டது. அப்போது திடீரென வெட்டிய மின்னல் மணமகனை தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வானிலை மோசமாக இருப்பதால் போட்டோஷூட் நடத்த வேண்டாம் என சுற்றுலா நிர்வாகம் அறிவுறுத்தியும், அதை மீறி போட்டோஷூட் நடத்தப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்