உலக பட்டினி நாடுகளில் இந்தியா 101வது இடம்! – அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (17:05 IST)
உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் வாடும் நாடுகள் குறித்த தரவரிசையில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் கொரோனா, பொருளாதார பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் பல நாடுகளில் பட்டினி, வறுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலகளவில் அதிகம் பட்டினி ஏற்பட்டுள்ள நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகம் பட்டினி இல்லாத நாடுகள் தரவரிசையில் முதலிலும் அடுத்தடுத்து பட்டினி அதிகமுள்ள நாடுகள் என்ற வகையிலும் வெளியாகியுள்ள இந்த தரவரிசையில் 116 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது. முன்னதாக 94வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மேலும் சரிந்துள்ளது.

மேலும் பட்டினி மிகவும் அதிகமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்