இரண்டாவது பசுமை புரட்சிக்கு இந்தியா தயாராக வேண்டும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா இரண்டாவது பசுமை புரட்சிக்கு தயாராவதற்கான நேரம் வந்துவிட்டது. புதிய விவசாய கருவிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உரங்களை பயன்படுத்துவதில் புதிய முறைகள், தண்ணீரை பயன்படுத்துவதில் புதிய வழிமுறைகள் என அனைத்திலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆரோக்கியம் என்பது இன்றைய மனிதனுக்கு எட்டாத கனியாக போய்விட்டது. இந்த நிலையை மாற்ற நமது புதுமையான வழிமுறிகளை புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து 2வது பசுமை புரட்சிக்கு தயாராக வேண்டும்.
குடிநீர் தற்போது நாட்டில் பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது. எனவே மழை நீரை தேக்கி வைத்து அதை சுத்திகரித்து குடிநீராக மாற்ற வேண்டும்.