இந்தியாவில் உச்சம் நோக்கி கொரோனா! ஒரே நாளில் 37,093 ஆக உயர்வு!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:41 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து இருந்ததுடன் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். தற்போது கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் பாதிப்புகளை தாண்டிய கொரோனா வேகமாக உயர்ந்து தற்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை காணத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியா முழுவதும் 5,676 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37,093 ஆக உயர்ந்துள்ளது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதுடன், பல மாநிலங்களில் மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்