தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கு தானம் செய்யும் இந்தியா??

புதன், 20 ஜனவரி 2021 (08:57 IST)
6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இந்தியா 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆம், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்