வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: நாளை முதல் ரூ.10 ஆயிரம் அபராதம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (07:07 IST)
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை அந்த ஆண்டின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்து வரும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதலில் நவம்பர் வரை நீடிக்கப்பட்டு இருந்த அவகாசம் அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது 
 
இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருமானத் துறை அலுவலகம் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில் இன்றுடன் வருமான வரி தாக்கல் செய்யும் நாள் நிறைவடைகிறது
 
இதனை அடுத்து அபராதம் இன்றி இன்றுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் நாளை முதல் ரூபாய் பத்தாயிரம் செலுத்தி தான் அபராதம் செலுத்தி தான் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு பின்னர் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக இன்றைக்குள் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்