இதையடுத்து, பறக்கும் படையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கே பத்தாயிரம் வாக்காளர் அட்டைகள் சிக்கின. வாக்காளர் அடையாள அட்டை சிக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதற்கிடையே, அரசியல் கட்சிகள் வாக்காளர் அட்டை சிக்கிய தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி வந்தனர்.