அபிநந்தனை உடனே ஒப்படையுங்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம்!!!

வியாழன், 28 பிப்ரவரி 2019 (10:05 IST)
நேற்று முந்தினம் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல்  நடத்தியது. 21 நிமிட தாக்குதலில் 350 தீவிரவாதிகள் அழிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பறந்து சென்று தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நம் இந்திய விமானி பாகிஸ்தான் நாட்டுக்குள் விழுந்தார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தினரின் பிடியில் அவர் வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.
இந்நிலையில் விமானப்படை வீரர் மற்றும் லிங் கமாண்டர் அபிநந்தனை  மீட்க இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் துணைதூதரிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. மேலும் அபிநந்தனை மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
 
அபிநந்தனை உடனே ஒப்படைக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம் இந்தியா தூதர்  வலியுறுத்தியுள்ளது.
 
மேலும் லிங்கமாண்டர் அபிநந்தனை மீட்பதற்கான ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்