பாகிஸ்தானை பழி தீர்க்க இந்தியா எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா?

புதன், 27 பிப்ரவரி 2019 (20:29 IST)
புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது.
 
 
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
 
இந்தத் தொடர் தாக்குதல்களால் இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இதனால் இரு நாட்டு மக்களுக்கு போர் நடந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியாவிற்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. 
அதாவது, பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. வானில் சீறிப்பாய்ந்து வென்ற மிராஜ் ரக விமானம் ஒவ்வொன்றிலும், லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் வகையில் 225 கிலோ எடைகொண்ட குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன. 
 
ஆனால் 3 பயங்கரவாத முகாம்களில் 4 அல்லது 5 குண்டுகள் மட்டுமே வீசப்பட்டன. அந்த வெடிகுண்டுகளின் மதிப்பு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதர செலவுகளையும் சேர்த்து சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்