கொல்கத்தா ஐஐடியில் படித்து வந்த மாணவி ஒருவரை, அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை ஆரம்ப கட்டத்திலேயே ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை பாதிக்கும் என்று கூறி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மாணவருக்கு 50,000 ரூபாய் பிணைப் பத்திரத்தில் ஜாமீன் வழங்கியது.