100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

Mahendran

வெள்ளி, 18 ஜூலை 2025 (13:43 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அதன் பின் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறிய தகவல் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது என்பதும், இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்தத் தகவலை, இந்த கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மைப் பணியாளர், ஆதாரங்களுடன் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். "நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, நிர்வாண நிலையில் எரித்து, கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக" அந்த ரகசிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக மாநில மகளிர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். காணாமல் போன பெண்கள் குறித்த கணக்கெடுப்பு எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல், எந்த சட்ட நடைமுறைகளும் எடுக்காமல் பிணத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்களின் உறவினர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே இது குறித்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்