ஆதார் மொபைல் எண் இணைப்பு: மத்திய அரசின் திட்டவட்ட அறிவிப்பு...

வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:18 IST)
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதை எதிர்த்து பல கண்டங்கள் எழுந்தன.


 
 
ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்பை எதிர்த்து மேற்கு வங்கத்தில் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில், மத்திய அரசுக்கு நான்கு வாரங்களில் ஆதார் இணைப்பின் கட்டாயம் குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
இந்நிலையில், இன்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் கடந்த 2017 பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று உத்தரவிட்டது. 
 
எனவே, இந்த உத்தரவை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு தயாராக இல்லை என்றும்  வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்