பாஜக இல்லைன்னா 90 சதவீதம் முஸ்லீம்கள்தான் இருந்திருப்பாங்க! - அசாம் பாஜக வீடியோ சர்ச்சை!

Prasanth K

புதன், 17 செப்டம்பர் 2025 (14:16 IST)

அசாமில் பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் முழுவதும் முஸ்லீம் மாநிலமாக மாறியிருக்கும் என ஏஐ மூலமாக அசாம் பாஜக வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது அசாமில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் ஏஐயில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள அந்த வீடியோவில், “அசாமில் பாஜக ஆட்சி இல்லாவிட்டால் 90 சதவீதம் இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும். மாட்டுக்கறி சட்டப்பூர்வ உணவாக மாறும். பாகிஸ்தான் தொடர்புடைய காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும். விமான நிலையம் தொடங்கி கிரிக்கெட் மைதானம் வரை முஸ்லீம்களே நிறைந்திருப்பார்கள். அவர்கள் நமது நிலங்களை ஆக்கிரமிப்பார்கள்” என சர்ச்சைக்குரிய கருத்துகளும், காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

 

இதற்கு அசாம் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அசாம் மாநில பாஜக அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகாவே இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

We can’t let this dream of Paaijaan to be true!! pic.twitter.com/NllcbTFiwV

— BJP Assam Pradesh (@BJP4Assam) September 15, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்