எனக்குப் பெரிய பதவி வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (17:04 IST)
எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாம், நாட்டின் வளர்சியின் மீது தான் எனக்கு ஆர்வம் என  முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒருதனியார் தொலைக்காட்சிகு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

மத்திய அரசு மகாராஷ்டிராவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. அடுத்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெளியேற்றுவார்கள்.  எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாம்., எனக்கு தேசத்தின் வளர்ச்சியின் மீதுதான் ஆர்வம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்