சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் ஆறு பெண்கள் வெற்றி பெற்றனர்.
அதன் பிறகு, பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் பதவி ஏற்றனர். பஞ்சாயத்து செயலாளரும் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
"வெற்றி பெற்றவர் ஒருவர், ஆனால் பதவி ஏற்றது வேறொருவரா?" என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றாலும், அவர்களுடைய கணவர்கள் தான் அதிகாரம் செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.