இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவ்வாறு நாட்டின் பெயரை மாற்றினால் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.
அரசு ஆவணங்கள், வடிவங்கள், பெயர் பலகைகள், வரைபடங்கள், அலுவலகங்கள் பெயர் மாற்ற இந்த செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்திய உச்சநீதிமன்றம், இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல மாற்றம் செய்ய வேண்டிய நிலை வரும் என்றும் இதனால் இந்தியாவின் வருவாயில் ஆறு சதவீதம் இதற்காக செலவழிக்க வேண்டிய நிலை வரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு இதனை கணக்கில் கொண்டு இந்தியாவின் பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடாது என்று தான் பலர் கூறுகின்றனர்