மயக்க மருந்து கொடுத்து மனைவியை கொலை செய்த டாக்டர்.. 6 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

Mahendran

வியாழன், 16 அக்டோபர் 2025 (12:44 IST)
பெங்களூருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த மருத்துவர் கிருத்திகா ரெட்டி கொலை வழக்கில், அவரது கணவரும் பொது அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் மகேந்திர ரெட்டி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த ஏப்ரல் 21 அன்று, கிருத்திகா திடீரென உடல்நல குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 'வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக' அறிவிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டது.
 
இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட மாதிரிகளின் தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை, கிருத்திகாவின் உடலில் 'புரோபோஃபோல்' என்ற சக்திவாய்ந்த மயக்க மருந்து அதிக அளவில் இருந்ததை உறுதிப்படுத்தியது. இது கிருத்திகாவின் மரணம் ஒரு குற்றச் செயல் என்பதை காட்டியது.
 
இந்த அறிக்கையின் அடிப்படையில், கிருத்திகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், மகேந்திர ரெட்டி அக்டோபர் 14 அன்று மணிப்பாலில் கைது செய்யப்பட்டார்.
 
"தற்போதுள்ள ஆதாரங்கள் அடிப்படியில் அவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தனது மருத்துவ அறிவை பயன்படுத்தி மரணத்தை இயல்பானதாக காட்ட முயன்றிருக்கலாம்," என்று காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார். 
கைது செய்யப்பட்டவர் தற்போது காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்