தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்- திமுக எம்.பி.,டி.ஆர்.பாலு

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:03 IST)
மக்களவையில் இன்று  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதத்தின்போது, 'இந்தியா 'கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு  பேசியதாவது:

''பிரதமர் மோடிக்கு அவைக்கு வருவதில்லை. தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்,எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை. மத்திய அரசு ரூ. 15 லட்சம் பட்ஜெட் போடும்போது, மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏன் ரூ.2000 கோடியை ஒதுக்க முடியவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ''இலங்கை அரசியல் சட்டத்தில் 23 வது திருத்தத்தை அமல்படுத்த மத்திய  அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மீட்பதில் இருந்து பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றத்தில் நாடளுமன்றத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு தவறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்