வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை திடீர்உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (08:00 IST)
சமையல் காஸ் சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது என்பதும் தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கும் அதிகமாக சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வணிக நோக்கத்திற்காக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சென்னையில் வீட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.1018.50 என்ற விலையில் இருந்து ரூ.1,068.50 என உயர்ந்து உள்ளது 
 
கடந்த மே 7ஆம் தேதி மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்