பாபா ராம்தேவ் மரணம்? வாட்ஸ்அப் வைரல்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (20:53 IST)
சுமார் ஒரு மணி நேரமாக பாபா ராம்தேவ், விபத்துக்குள்ளான புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் மரணமடைந்து விட்டதாகவும் புரளி பரவி வருகிறது.


 

 
யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா முழுவதும் பிரபலமானவர். தற்போது இவர் விபத்துக்குள்ளான புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் இறந்துவிட்டதாகவும் புரளி பரவி வருகிறது.
 
யோகா குரு ராம்தேவ் புனே - மும்பை சாலையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாக செய்திகள் பரவி வருகிறது. இரண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒன்று அவரது கார் விபத்துக்குள்ளானது. மற்றொன்று விபத்தில் சிக்கிய அவரை துக்கிச் செல்கிறார்கள். 
 
இச்செய்தி பொய்யானது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி விபத்து எதுவும் நடைப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த புகைப்படம் 2011 ஆம் ஆண்டு பிகாரில் நடந்த சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்