இந்தி தேசத்தை ஒன்றிணைக்கிறது- அமித்ஷா பேச்சால் சர்ச்சை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:15 IST)
இந்தி மொழி தேசத்தை ஒன்றிணைக்கிறது என மத்திய அமைச்சர் பேசியதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   இந்த அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஆர்வம் காட்டி வருவதற்கு எதிர்க்கட்சிகள் பலரும்  விமர்சித்து வருகின்றனர்.

செப்டம்பர் 14 ஆம் தேதியான நேற்று  இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி  குஜராத்தில் சூரத் நகரில் நடந்த  இந்தி மொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா,  அலுவலக மொழியான இந்தி  தேசத்தை  ஒற்றுமையில் ஒருங்கிணைக்கிறது.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பாக இருப்பதால் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு இணையாக இந்தி வளர்க்க மோடி உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்