இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:20 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இமாச்சல பிரதேச தேர்தல் விவரங்களை தற்போது பார்ப்போம்:
 
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி: அக்டோபர் 17
 
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: அக்டோபர் 25
 
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: அக்டோபர் 27
 
வேட்புமனு மீதான பரிசீலனை தேதி: அக்டோபர்  29
 
தேர்தல் தேதி: நவம்பர் 12
 
வாக்குகள் எண்ணப்படும் தேதி: டிசம்பர் 8
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்