நடிகர் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமாமாலினி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக சமீபத்தில் தர்மேந்திரா தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான சன்னிதியோல், சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் அமிர்தசரஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது