22 ஆம் தேதி வரை கொட்டப்போகுது கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (12:13 IST)
ஜூலை 22ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமம் அடைந்து வருகிறது என்பதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஜூலை 22ஆம் தேதி வரை கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 21ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
 வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் இதன் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்