8 பாஸ்போர்ட், 4 முறை பாகிஸ்தான் பயணம்.. உளவு சொன்னதால் கைதான வாலிபரிடம் விசாரணை..

Siva

ஞாயிறு, 18 மே 2025 (08:23 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட ஹரியானா வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்ததில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாகக் கூறப்படும் இவ்வாலிபர், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ்ஐ கமாண்டருடன் அந்த வாலிபர் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. 
 
மேலும், பாகிஸ்தானுக்கு அவர் நான்கு முறை பயணம் செய்திருப்பதாகவும், ஐஎஸ்ஐ வழங்கிய பயிற்சிகளிலும் அவர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தியாவில் ஒரு தெரு வியாபாரியாக தன்னை காண்பித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி, அவரிடம் எட்டு பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், இந்தியன் ரயில்வே குறித்த சில முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு லீக் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், உள்ளூரில் 150 பேர்களிடம் அவர் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, யூடியூபர்  ஒருவர் உளவு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்