ஹீரோவுடன் டீலிங், மீண்டும் வருகிறது ஹார்லி டேவிட்சன்! – இளைஞர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (11:01 IST)
கடந்த சில மாதங்கள் முன்னதாக இந்தியாவில் விற்பனையை நிறுத்திய ஹார்லி டேவிட்சன் மோட்டார் வாகன நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்கிறது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 111 ஆண்டுகளாக தனது பைக்குகளை விற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்காக ஹரியானாவில் ஒரு தொழிற்சாலை மட்டுமே இந்தியாவில் இயங்கி வருகிறது. ஹார்லி டேவிட்சனின் மாடல் பைக்குகள் இன்றும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் பைக்காக இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும் நாடுகளில் இருந்து வெளியேற ஹார்லி டேவிட்சன் திட்டமிட்ட நிலையில் சில மாதங்கள் முன்னதாக இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இது ஹார்லி டேவிட்சன் பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனது மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை இந்தியாவில் மேற்கொள்ள புதிய வழிமுறையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள ஹார்ட்லி டேவிட்சன் தனது மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை ஹீரோ ஷோ ரூம்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்