ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி... கேரள அரசு புது அறிவிப்பு!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (08:49 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்கவுள்ளது. 
 
கேரளாவில் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் ஆகியவை அதிகரித்து வரும் நிலையிலும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. இணையதளத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் 15,000 பேர் தினமும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் மண்டல மற்றும் மகர விளக்கு விழா தொடங்கவுள்ளது. இதனால்  நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. 
 
அதோடு பம்பை நதியில் குளிப்பதற்கும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் / கொரோனா நெகடிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்