மக்களவைத் தேர்தல் – எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்தது பாஜக?

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (10:49 IST)
மக்களவைத் தேர்தல் இன்னும் நான்கு மாதத்தில் நடக்க இருப்பதால்  பாஜக தனக்கு எதிரிகளாகக் கருதுபவர்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த விவாதம் ஒன்றில் இந்தியாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதாக ஜே.என்.யூ மாணவர் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாஜக எம்.பி. மஹிஷ் கிர்ரி அளித்த புகாரின் அடிப்படையில் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் செளிவந்துள்ளனர். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நடந்த கைதுக்கு இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து இவர்கள் மீது 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வரும் வேளையில் இவர்கள் பாஜக வுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது சம்மந்தமாகக் கருத்து தெரிவித்துள்ள கன்னையா குமார் ‘ தேர்தல் வரவுள்ளதால் அர்சியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவே எங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்