பாஜவுடன் கூட்டணியா? ஸ்டாலின் வெளியிட்ட பரபர அறிக்கை

வெள்ளி, 11 ஜனவரி 2019 (13:59 IST)
பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக உரையாற்றினார் நரேந்திர மோடி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்றும், பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
 
மோடியின் இந்த கருத்து கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதவாது பழைய நண்பர்கள் என்றால் திமுகவை குறிப்பிடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு ஏற்றார் போல வதந்திகளும் பரவியது. 
இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் ஸ்டாலின், கடந்த 4.5 ஆண்டுகாலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது. வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. நாட்டை பிளவு படுத்தும் எந்த திட்டத்தையும் வாஜ்பாய் அரசு முன்வைக்காததாலேயே அந்த கூட்டணிக்கு திமுக ஆதரவளித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்