அரசு ஊழியர்கள் 18-20 மணிநேரம் பணிபுரிய வேண்டும்; ஆப்பு வைத்த உபி முதல்வர்

திங்கள், 27 மார்ச் 2017 (17:02 IST)
உத்திரப்பிரதேசத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் எவ்விதாமான தொய்வும் இல்லாமல் இருக்க அரசு ஊழியர்கள் 18-20 மணிநேரம் அவரை வேலை செய்ய வேண்டும் என முதல்வர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


 


 
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று தனது வீட்டில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் 18-20 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என உத்திரவிட்டுள்ளார்.
 
இதனால் மாநில அரசு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த அதிரடி உத்தரவு குறித்து அவர் கூறியதாவது:-
 
மாநில அரசு அதிகாரிகள் தினமும் 18-20 மணிநேரம் வரை வேலை செய்யத் தாயாராக வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் வேலையை விட்டு எவ்விதமான தடையுமின்றி வெளியேறிக்கொள்ளலாம். மாநில அரசின் திட்டத்தை செயல்படுத்தவதிலும், அமல்படுத்துவதிலும் எவ்விதமான தொய்வும் இருக்கக்கூடாது.
 
நான் கடுமையாக உழைப்பவன், அரசு அதிகாரிகள் அரசின் தேவையை முழுமையாகப் பூர்த்திச் செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்நிலையில் வேலை செய்யாதவர்கள், அரசின் தேவையைப் பூர்த்திச் செய்யாவார்களுக்கு அரசி பணியில் இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
இவரின் இந்த கடுமையான உத்தரவு சற்று சிந்திக்கவும் வைத்துள்ளது. கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனங்களின் இலக்கை அடைய 12 மணி நேரத்திற்கும் மேல் பணிபுரிவது உண்டு. அதேபோல் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் மக்களுக்காக அதிக நேரம் வேலை பார்ப்பது தவறில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்