இது வழக்கமானது அல்ல, ஆனால் வழக்கு எப்படி வழக்கமாகிறதா என பார்க்கலாம்: தமிழிசை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (13:01 IST)
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு என்பது வழக்கமானது அல்ல, ஆனால் வழக்கு எப்படி வழக்கமாகிறதா என பார்க்கலாம் என்று தெரிவித்தார். 
 
தெலுங்கானா சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தெலுங்கானா அரசு ’ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார் என்றும் அரசியல் அமைப்பு சட்டம் அழைத்துள்ள உரிமைகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கு குறித்து ஏற்கனவே தனது டுவிட்டரில் பதில் கூறியிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ’கடந்த ஜனவரி மாதம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக சாந்திக்குமாரி தன்னை சந்திக்காமல் இருப்பதையும் ஆளுநர் மாளிகையுடன் அதிகாரிகள் நல்லுறவை பேணாமல் இருப்பதையும் சுட்டி காட்டி இருந்தார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து இந்த செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் ’வழக்கு என்பது வழக்கமானது அல்ல என்றும் ஆனால் வழக்கு எப்படி வழக்கமாகிறதா என பார்க்கலாம்’ என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்