ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
புதன், 17 மே 2023 (14:54 IST)
ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், மத்திய அரசுடன் இணைந்து, ரேசன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசால் பல வசதிகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, முதல்வர்  மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா  மாநில பிஜேபி அரசு பிபிஎல்(BPL) கார்டு வைத்துள்ள  குடும்ப அட்டைதாரர்களுக்கும், அந்த்யியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) இரண்டு லிட்டர் கடுகு எண்னெய் இலவசமாக வழங்கப்படுவதாக முன்னர் கூறியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு எண்ணெய் விலை உயர்வால் அரசாங்கம்  இலவச எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.

இதற்குப் பதில், ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.250 வழங்குவதாக அறிவித்தது.

இத்தொகையை அதிகரிக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில்,  மாநில அரசு ரூ. 250 ல் இருந்து ரூ.300 ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,  இதன் மூலம் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரேசன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு மே மாதம் அரிசி, கோதுமை, சர்க்கரை இருமுறை வழங்கப்படும். இந்த ஆண்டுமுழுவதும் இலவசமாக ரேசன் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்