விமான பெண் ஊழியர் கற்பழிப்பு விவகாரம் ! பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (16:11 IST)
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த திங்கள் அன்று விமான பெண் ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை அன்று பணி முடிந்தவுடன், தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குச் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அதே நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் ஒருவருடன் ஒரு காரில் அப்பெண் சென்றார் என்று தெரிகிறது.
 
பின்னர் இருவரும்  ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மதுகுடித்துள்ளனர்.இதையடுத்து அவன் தன்னுடைய அறைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு ஏற்கனவே இருவர் இருந்துள்ளனர். 
 
இதனையடுத்து மூன்று பேரும் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலையில் தனது உடலில் காயம், வலிகள் இருப்பதை உணர்ந்த அவர் , ஹோட்டலில் நடந்தவற்றை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் அப்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவனை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் இருவரை கைதுசெய்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரித்துவருகின்றனர்.
வரும் ஜுன் 10 தேதிவரை இம்மூவரும் போலீஸ காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்