திருடனை பிடிக்க 1 கி.மீ ஓடிய பெண்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (18:35 IST)
டெல்லியில் இளம்பெண் ஒருவர் திருடனை பிடிக்க 1 கி.மீ ஓடியுள்ளார். 


 

 
டெல்லியில் நேற்று மாலை அனிதா சிங்(23) என்பவர் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு அவரது தாயுடன் மண்டாவலி ரயில்வே பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்கள் அனிதாவின் ஹேண்ட் பேக்கை பிடிங்கி கொண்டு ஓடினர்.
 
அவர்களை பிடிக்க அனிதா ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடிய திருடனை விடாமல் 1 கி.மீ தூரம் துரத்தி சென்றார். அருகில் சென்று பிடிக்க முயன்றபோது, அனிதாவை தள்ளிவிட்டு அந்த திருடன் தப்பி சென்றான்.
 
அனிதா கீழே விழுந்ததில் பல காயத்துடன் மயங்கினார். இதற்கிடையில் அனிதாவின் தாய் அருகில் உள்ள இடத்துக்கு சென்று அங்கிருந்த மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த பகுதி மக்கள் ஓடிச் சென்று பார்த்தப்போது அனிதா ங்கு மயக்கத்தில் கிடந்தார்.
 
தற்போது அனிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஹேண்ட் பேக்கில் தாயார் மருத்துவ செலவுக்கு ரூ:20,000 வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். காவல் துறையினர் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்