எனது மகளை தயவுசெய்து விட்டுவிடுங்கள்: டுவிட்டரில் கெஞ்சிய கங்குலி!

வியாழன், 19 டிசம்பர் 2019 (10:32 IST)
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஆதரவாகவும் எதிராகவும் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களின் மகள் சானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அவர் கூறியிருப்பதாவது: நான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்துவன் இல்லை என்பதால் தங்களை பாதுகாப்பாக உணரும் நபர்களே, நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் குறி நாளை உங்கள் மீதும் பாயும். உங்களையும் அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். இறைச்சி சாப்பிடாதீர்கள், மது அருந்தக் கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது. அவர்கள் சொல்லும் பற்பசையை பயன்படுத்தவேண்டும். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்படும் முத்தத்திற்கு பதிலாகவும், கைகுலுக்குவதற்கு பதிலாகவும் `ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்ல நேரிடும். யாருமே இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடனே வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் இதனை உணர வேண்டும்
 
சானாவின் இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவும் பெரும்பாலானோர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  தனது மகள் சானாவை இந்த பிரச்சினையில் இருந்து விட்டு விடுங்கள் என்றும், இந்த பதிவில் உண்மை இல்லை என்றும் அவள் இளம்பெண் அவளுக்கு அரசியல் பற்றி எதுவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கங்குலியின் இந்த பதிவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்