கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:00 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது 
 
இந்த இரவு நேர ஊரடங்கின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், மட்டுமே இரவு நேரப் பணிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்ற யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இரவு 10 மணிக்கு மேல் யாரும் கடைகளை திறந்து வைக்கக்கூடாது என்றும் சாலைகளில் நடமாட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பே 45 ஆயிரம் என்ற நிலையில் கேரளாவில் மட்டும் 30 ஆயிரம் இருப்பதால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்