கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி திருப்பதி கோவில் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில நிபந்தனைகளுடன் திருப்பதி கோவில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இலவச தரிசனம் அனுமதிக்கப்படவில்லை என்பதும் இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் திருப்பதி தேவஸ் திருமலை தேவஸ்தானம் ஒரு சில நிபந்தனைகளை இலவச தரிசன பக்தர்கள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இலவச தரிசனத்துக்கு பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இன்று டிக்கெட்டுகள் வாங்கும் பக்தர்கள் நாளை அதாவது ஜனவரி 4ஆம் தேதி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசனம் தான் செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டிருப்பது திருப்பதி கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது