மைசூர் ஸ்ரீ எல்லாம் செல்லாது.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு கண்டனம்..!

Mahendran

செவ்வாய், 27 மே 2025 (11:58 IST)
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சில இனிப்பு கடைகள் பிரபலமான "மைசூர் பாக்" இனிப்பின் பெயரை "மைசூர் ஶ்ரீ" என மாற்றியுள்ளனர். இனிப்பில் கூட ‘பாகிஸ்தான்’ பெயர் வரக்கூடாது என்று எடுத்த இந்த முடிவு பலரது கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்துள்ளது.
 
இந்த நிலையில் மைசூர் அரண்மனையில் வேலை செய்த சமையல்கலை கலைஞர் ஒருவர் தான் இந்த மைசூர்பாக்கை கண்டுபிடித்தார். இவருடைய நான்காம் தலைமுறை வாரிசுதாரர்  எஸ். நடராஜ்  என்பவர் இன்னும் மைசூரில் ‘குரு ஸ்வீட்ஸ்’ என்ற கடையை நடத்தி வருகிறார். அவர் மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றியது குறித்து கூறியதாவது:
 
"மைசூர் பாக் என்பது எங்கள் பாரம்பரிய அடையாளம். ‘பாக்’ என்பது கன்னடத்தில் சர்க்கரை பாகை குறிக்கும். இதன் பெயரை மாற்றுவது மரபை மாற்றுவது போல. உலகில் எங்கே பார்த்தாலும் இது ‘மைசூர் பாக்’ எனவே அழைக்கப்படும், அதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது."
 
இதே குடும்பத்தை சேர்ந்த இன்னொரு வாரிசுதாரர் சுமேக் என்பவர் கூறியபோது, ‘"இது வெறும் இனிப்பு அல்ல; இது மைசூர் மக்களின் கலாச்சாரம், கன்னடர்களின் பாரம்பரியத்தின் ஒரு சின்னம். உலகம் முழுக்க ‘மைசூர் பாக்’ என்றே இந்த இனிப்பு  அறியப்படுகிறது. இந்தப் பெயரை மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது."
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்