நரேந்திர மோடி எனது நண்பர்: பிரான்ஸ் அதிபர் டுவீட்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (09:17 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர் என பிரான்ஸ் அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்ததை அடுத்து இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு முடியும் வரை இந்த தலைமை இந்தியாவிடம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை வழங்கும் என்றும் நரேந்திர மோடி எனது நண்பர் என்றும் உலகில் சமாதானத்தை உருவாக்கிட அமைதியை தட்டி எழுப்ப இந்த உலகத்தை அவர் ஒன்றிணைந்து செயல்படுவார் என்று நம்புகிறோம் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்