உணவு, வாடகை... ஏழைகளுக்கான திட்டங்களை விவரிக்கும் நிர்மலா சீதாராமன்!
வியாழன், 14 மே 2020 (17:16 IST)
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2 ஆம் கட்டம் குறித்து விளக்க செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
ஏற்கெனவே ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன், மீதமுள்ள தொகைக்கான திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி,
ரேசன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும்
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்
தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கூடுதலாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது
விவசாயிகளுக்கு கடனுதவி - கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கார்டுகள் வழங்கி ரூ.25 ஆயிரம் கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது
கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புவர்கள் சேர்ப்பு
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் சுமார் 2.5 கோடி பேருக்கு கிஷான் கிரடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன்
3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 ஆம் தேதி வரை தள்ளுபடி
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகின்றன
100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக மே 13ம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன
கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது
முத்ரா திட்டத்தில் வட்டிசலுகைக்காக ரூ.1,500 கோடி செலவிடப்படுகிறது
12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன
சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
ரூ.10 ஆயிரம் துவக்க நிலை செயல்பாட்டு மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்
வேலை வாய்ப்பை ஊக்குவிக்க சிஏஎம்பிஏ நிதிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு
சிஏஎம்பிஏ நிதி மூலம் நகர்புற, புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாகும்
வீட்டுக்கடன் மானியத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 21ந் தேதி வரை நீட்டிப்பு
நடப்பு நிதி ஆண்டில் வீட்டுக்கடன் மானியத்திட்டத்தில் 2.5 லட்சம் நடுத்தர குடும்பம் பலன் அடையும்
வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி
தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும்
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202ஆக உயர்வு
அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும்
வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை