உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமைந்துள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில், ஐந்து கைதிகளுக்கு எச்ஐவி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இது குறித்து சிறையின் மருத்துவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தங்கள் உடலில் பச்சைக் குத்தியதாகவும், ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு எச்ஐவி நோய் பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து, எச்ஐவி பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறப்பு உணவு மற்றும் மருந்து வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் பேருக்கும் அதிகமாக அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் ஏற்கனவே ஒன்பது பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மேலும் பரபரப்பு உருவாகியுள்ளது.