முதலில், இந்த ட்ரோன் பறந்ததை சிறை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த ட்ரோன் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் பறந்து, சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சிறை ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பொதுவாக, திருமணம் அல்லது ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகள் நடந்தால், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தல் வழக்கம். ஆனால், அந்த சிறைச்சாலை அருகே எந்த திருமணமும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
இதனால், அந்த ட்ரோன் ஏன் பறந்தது? அதை இயக்கியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.