ரூ. 3.42 கோடிக்கான காசோலையை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கிய முதல்வர்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (12:22 IST)
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய ரூ. 3.42 கோடிக்கான காசோலையை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உலக சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு மராத்தான் போட்டியை தமிழக அரசு நடத்தியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில்,  விளையாட்டு, வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் -2023போட்டியில்,  73,206 பேர் பங்கேற்றனர். இதில், 42கிமீ, 10 கிமீ, 5கிமீ என  4 பிரிவுகளில்  நடைபெற்ற நிலையில்,  வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ.10.70 லட்சம் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர்.

மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி வசூலானது என்றும், இது சாதாரண மாரத்தான் அல்ல சமூக நீதி மாரத்தான் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,  இம்மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய ரூ. 3.42 கோடிக்கான காசோலையை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்தக் அக்காசோலையை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர்  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்